திருப்பூர் மற்றும் அத்னைச் சுற்றி சுமார் 25,000 பின்னலாடை உற்பத்தி ஆலைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலை முதலாளிகளுக்கு கோடி கோடியாக வருவாயை ஈட்டிக் கொடுத்து, இந்திய ஆடை உற்பத்தி துறையின் மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கையும் ஈட்டிக் கொடுக்கும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு வருமானம் 2009 ஆம் ஆண்டிலேயே 120 பில்லியன் ரூபாயை எட்டியிருந்தது.கடந்த ஆண்டு இது இன்னும் அதிகரித்திருக்கும் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்த அளவுக்கு வருவாயை ஈட்டித்தரும் இந்த திருப்பூர் ஆடை உற்பத்தி ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ, வறுமையின் கோரப்பிடியில்!
இந்த தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் சுமார் 3 லட்சம் பேர் பிழைப்புக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, குறிப்பாக தென்மாவட்டங்களிலிருந்தும், பீகார், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களிலிருந்தும் வந்து குடியேறியவர்கள்தான்!
ஆனால் வறுமை, வேலைப் பளு, நிரந்தரமற்ற வேலை, கழுத்தை நெரிக்கும் கடன்கள், வட்டிக்கு கடன் கொடுக்கும் பைனான்சியர்கள் மற்றும் அவர்களது அடியாட்களின் துன்புறுத்தல்கள் என நாலாபுறமிருந்தும் நெருக்கும் பிரச்சனைகளால், இந்த தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களும் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறி அதிர வைக்கிறது தேசிய குற்றவியல் ஆவணக் கழகம்!
உழைப்புக்கு ஏற்ற கூலி இன்றி வறுமையின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள்து குடும்பத்தை சேர்ந்தவர்களின் தற்கொலை எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 40 முதல் 50 வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 405 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கிறது அரசு பதிவேடுகள் மூலம் பதிவான புள்ளிவிவரங்கள். இந்த எண்ணிக்கை, கடந்த 2009 ல் 338 ஆக காணப்பட்டது.
வறுமை, வேலையின்மை, பணமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு மதுவில்தான் என்ற தவறான எண்ணத்தில், குடித்துவிட்டு வரும் ஆண்கள் வீட்டில் மனைவி பிள்ளைகளுடன் தகராறு செய்து, அவர்களை அடித்து உதைப்பது வாடிக்கையாகி வருகிறது.
கணவனின் அராஜகத்தை பொறுத்து பொறுத்து பார்க்கும் பெண்கள், இறுதியில் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து புகார் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற குடி பிரச்சனைகள் மட்டுமல்லாது பாலியல் பிரச்சனைகள் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காகவும் மகளிர் காவல் நிலையம் படி ஏறுகின்றனர் பெண்கள்.
திருப்பூரிலுள்ள தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர், கடந்தமாதம் மட்டும் 103 பேர் விஷம் குடித்தோ, தூக்கிட்டோ அல்லது தீவைத்துக் கொண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல் நிலையங்களில் பதிவான புள்ளிவிவரங்களை கூறி அதிரவைக்கிறாரஇந்திய தொழிலாளர் சட்டம், 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் கூலி கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. ஆனால் திருப்பூரிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் 8 மணி நேர கூலி அடிப்படையிலான சம்பளத்திலேயே தொழிலாளர்கள் 12 மணி நேரம் வரை, சில இடங்களில் 16 மணி நேரம் வரை கூட வேலை வாங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கட்டிங், ஸ்ட்ரிச்சிங், டெய்லரிங் மற்றும் அயனிங் போன்ற வேலைகளுக்கான 12 மணி நேர ஷிப்ட்டுக்கு சுமார் 190 ரூபாய் வழங்கப்படுகிறது.அதேப்போன்று லேபிளிங்கிற்கு 132, மடிப்பதற்கு 131, செக்கிங்கிற்கு 119 மற்றும் பேக்கிங்கிற்கு 106 ரூபாய் என்ற விகிதத்தில் கூலி வழங்கப்படுகிறது.
தொழிலாளர் சட்டம் மற்றும் ஊதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறான இந்த போக்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தி, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க வழி வகை செய்தாலே இத்தகைய தற்கொலைகளில் பாதியையாவது தடுக்கலாம்.
மனது வைக்குமா அரசு?
கட்டிங், ஸ்ட்ரிச்சிங், டெய்லரிங் மற்றும் அயனிங் போன்ற வேலைகளுக்கான 12 மணி நேர ஷிப்ட்டுக்கு சுமார் 190 ரூபாய் வழங்கப்படுகிறது.அதேப்போன்று லேபிளிங்கிற்கு 132, மடிப்பதற்கு 131, செக்கிங்கிற்கு 119 மற்றும் பேக்கிங்கிற்கு 106 ரூபாய் என்ற விகிதத்தில் கூலி வழங்கப்படுகிறது.
தொழிலாளர் சட்டம் மற்றும் ஊதிய ஒப்பந்த விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறான இந்த போக்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தி, தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க வழி வகை செய்தாலே இத்தகைய தற்கொலைகளில் பாதியையாவது தடுக்கலாம்.
மனது வைக்குமா அரசு?
குறிப்பு : ஆங்கிலத்தில் படித்ததை இங்கு பதிவு செய்துள்ளேன் .....